டாப் 10 நியூஸ்: மோடி வெளிநாடு பயணம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரை!

Published On:

| By Selvam

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 40 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

மோடி வெளிநாடு பயணம்!

பிரதமர் மோடி இன்று (நவம்பர் 16) முதல் நவம்பர் 21 வரை நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

ஆம்ஸ்ட்ராங் புத்தகம் வெளியீடு!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் எழுதிய ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

ஒன்ஸ் மோர் பாடல் ரிலீஸ்!

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தில் இடம்பெற்றுள்ள இதயம் பாடல் இன்று வெளியாகிறது.

புறநகர் ரயில்சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவடி, மூர்மார்க்கெட், சூலூர்பேட்டை, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சோளே குல்ச்சா

நாம் தமிழர் கட்சியில் தாசில்தார்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share