நீட் நுழைவு தேர்வு!
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் இன்று (மே 5) நடைபெறுகிறது.
அயோத்திதாசர் நினைவு தினம்!
அயோத்திதாச பண்டிதர் 110-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரியாதை செலுத்துகிறார்
சதுரகிரி செல்ல அனுமதி!
சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி கோவிலுக்கு செல்ல இன்று முதல் மே 8 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மஞ்சும்மள் பாய்ஸ் ரிலீஸ்!
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி உள்ளிட்டோர் நடித்த மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
வணிகர் மாநில மாநாடு!
மதுரையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் படம் அப்டேட்!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதல்!
வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
இன்றைய ஐபிஎல் போட்டிகள்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகளும், மற்றொரு போட்டியில் லக்னோ, கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொஞ்சம் ரிலாக்ஸ்… ஏடிஎம்ல ஏசி காத்து: அப்டேட் குமாரு
ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!