top ten news today

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாடு!

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

நீதிமன்ற திறப்பு விழா!

ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.

டாஸ்மாக் மதுபான வழக்கு விசாரணை!

டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிப்படுத்தும் வரை தமிழகம் முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்யத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பொறுப்பு தலைமை நீதிபதி ஓய்வு!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

கண்ணாடி கூண்டு பாலம்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பால பணிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

ஐடிஐ விண்ணப்பம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 368வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபர்ஹானா தலைப்பு பாடல்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்ஹானா படத்தின் தலைப்பு வீடியோ பாடல் (titile video song) இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!

யுபிஎஸ்சி தேர்வு : தமிழகத்திலிருந்து தேர்வானவர்கள் யார் யார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *