top ten news today

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் வெளிநாடு பயணம்!

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 23) சிங்கப்பூர் செல்கிறார். 9 நாள் அரசு முறை பயணமாக செல்லும் முதலமைச்சர் ஜப்பான் நாட்டுக்கும் செல்ல உள்ளார்.

துணைத்தேர்வு பயிற்சி வகுப்புகள்!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ரூ.2000 மாற்றும் வசதி!

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட்!

மூத்த குடிமக்களுக்கான திருப்பதி எழுமலையான தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 367வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சரத்பாபுவிற்கு இறுதி சடங்கு!

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு தகனம் செய்யப்பட உள்ளது.

முதல் பிளே ஆஃப் போட்டி!

ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் இன்று மோதும் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய வீரர்கள் லண்டன் பயணம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய வீரர்கள் இன்று லண்டன் செல்கின்றனர்.

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்!

சர்வதேச மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் கோலாம்பூரில் இன்று தொடங்குகிறது.

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சட்னி

உதயச்சந்திரன், ககன் தீப் சிங் பேடிக்கு கூடுதல் பொறுப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts