கர்நாடகா – வாக்கு எண்ணிக்கை!
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முதல்வர் மேம்பாலம் திறப்பு!
கொளத்தூா்-வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
ரஷ்யக் கல்விக் கண்காட்சி!
சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்தில், இன்றும் நாளையும் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
குறைதீர் முகாம்!
சென்னையில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்குவதற்கான குறைதீர் முகாம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
ரோஜா கண்காட்சி
உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
ஐபிஎல் அப்டேட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மாலை 7.30 மணிக்கும் மோதுகின்றன.
வீரன் பாடல்!
வீரன் படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 357வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
போக்குவரத்து மாற்றம்!
மழைநீர் வடிகால் பணியின் காரணமாக, சென்னை கே.கே.நகர்ப் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வானிலை அப்டேட்!
இன்று முதல் மே 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“மாடர்ன் லவ் சென்னை” ஆந்தாலஜியில் என்ன ஸ்பெஷல்?