ஸ்டாலின் பிரச்சாரம்!
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 27) தென்காசி, விருதுநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வேட்புமனு கடைசி நாள்!
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
எடப்பாடி பிரச்சாரம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அண்ணாமலை வேட்புமனு!
கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பாமக தேர்தல் அறிக்கை!
பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார்.
நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.
ஜரகண்டி பாடல் ரிலீஸ்!
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத், மும்பை மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத், மும்பை அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஃப்ரூட் சாலட்
காற்று மாசு ஏற்படுத்தியதால் கெஜ்ரிவால் கைது: அப்டேட் குமாரு