top ten news today in Tamil march 11 2024
உயர்மட்ட சாலை அமைக்கும் பணி!
தருமபுரி, தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் 6.6 கி.மீ தொலைவிற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
தேர்தல் பத்திரம் வழக்கு!
தேர்தல் பத்திரங்களை வெளியிட ஜூன் 30-வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அடிக்கல் நாட்டு விழா!
தருமபுரி மாவட்டத்தில் ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அதிமுக நேர்காணல்!
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெறுகிறது.
பாஜக ஆலோசனை கூட்டம்!
தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சென்னைபாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்கர் விழா!
96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 659-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரெபல் டிரெய்லர் ரிலீஸ்!
நிகேல் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ரெபல் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் மோதல்!
இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தூத்துக்குடி தக்காளி ஜாம்
யூசுப் பதானுக்கு வாய்ப்பளித்த மம்தா : இர்பான் பதான் உருக்கம்!
top ten news today in Tamil march 11 2024