புதிய விமான முனையம் திறப்பு! top ten news today in Tamil march 10 2024
புனே விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையத்தை பிரதமர் மோடி இன்று (மார்ச் 10) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல்!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து விசாரணை நடத்தக்கோரி, ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து மனு அளிக்க உள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்!
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேர்காணல் நடத்துகிறார்.
விவசாயிகள் ரயில் மறியல்!
வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மும்பை, விதர்பா மோதல்!
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை, விதர்பா அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 659-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, பெங்களூரு மோதல்!
இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஹாங்காங், நேபாள் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங், நேபாள் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கண்களைச் சுற்றி கருவளையமா… கவலை வேண்டாம்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?
top ten news today in Tamil march 10 2024