இன்று எங்கெங்கு மழை!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலைஞர் கோட்டம் திறப்பு!
திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைக்கிறார்.
மோடி அமெரிக்கா பயணம்!
அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பிலிருந்து அகற்றக் கோரி மதிமுக சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது.
சென்னையில் மருத்துவ முகாம்கள்!
சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அமமுக செயற்குழு!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், இன்று சென்னை தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது
ராஜ்நாத் சிங் சென்னை வருகை!
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வருகிறார்.
மேம்பாலங்கள் திறப்பு!
டெல்லி முதல் பானிபட் வரையிலான 8 வழி தேசிய நெடுஞ்சாலையில் 11 மேம்பாலங்களை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று திறந்து வைக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 394வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று (ஜூன் ,20), பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
8-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு இன்று முதல் 28-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்: தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி-சபரீசன் உரசல்: வசமாய் சிக்கிய செந்தில்பாலாஜி
”நீ நடந்தால் நடையழகு” மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்