திமுக சட்டத்துறை கருத்தரங்கம்!
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (ஜூலை 20) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்!
திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தொடங்கி வைக்கிறார்.
விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.
நினைவேந்தல் பேரணி!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இன்று சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்காமிஷி பாடல் ரிலீஸ்!
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் மக்காமிஷி பாடல் இன்று வெளியாகிறது.
வாஸ்கோடகாமா டிரைலர் ரிலீஸ்!
கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 125-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்காட்லாந்து – நமீபியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாதாம் அல்வா செய்முறை!
மைக்ரோசாப்ட்டுக்கு மயக்கம் வந்துடுச்சி போல :அப்டேட் குமாரு