வங்கதேச தேர்தல்! top ten news today in Tamil January 7 2024
வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஜனவரி 7) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
காவல்துறை மாநாடு!
அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல்துறை தலைவர்களின் மூன்றாவது நாள் மாநாடு ராஜஸ்தானில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
மதச்சார்பின்மை வெல்லட்டும் மாநாடு!
எஸ்டிபிஐ கட்சி இன்று மதுரையில் நடத்தும் மதச்சார்பின்மை வெல்லட்டும் மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
பொங்கல் பரிசு டோக்கன்!
பொங்கல் பரிசுக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணையர் சுற்றுப்பயணம்!
மக்களவை தேர்தலுக்கான மாநிலங்களின் தயார்நிலை குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மழை அப்டேட்!
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ரஞ்சி கோப்பை!
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற உள்ள 3வது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் மோதுகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை!
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கும் நிலையில் இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 596-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் 100 விழாவில் பங்கேற்றதன் காரணம் : ஸ்டாலின் விளக்கம்!
”சினிமாவை ஆயுதமாக மாற்றியவர் கலைஞர் தான்”: சூர்யா
top ten news today in Tamil January 7 2024