அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், இன்று (ஜனவரி 30) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. top ten news today
காந்தியடிகள் நினைவு தினம்!
காந்தியடிகளின் 78-ஆவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கிஷன் ரெட்டி மதுரை வருகை!
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, மத்திய கனிமளவத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு மதுரை மாவட்டம் அ.வள்ளாலப்பட்டி பொதுமக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
ரோப் கார் சேவை நிறுத்தம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக, பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.
‘புஷ்பா 2′ ஓடிடி ரிலீஸ்!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா 2’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி !
ரயில்வேஸ் – டெல்லி அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
‘தண்டேல்’ டிரைலர் ரிலீஸ்!
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் கார்த்தி இன்று வெளியிடுகிறார்.
வானிலை நிலவரம்!
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மூவேலா’ பாடல் ரிலீஸ்!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘மூவேலா’ வீடியோ பாடல் இன்று வெளியாகிறது.
.