இஸ்ரோவின் 100-வது ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 100-வது ராக்கெட்டான GSLVF15 மூலம் NVS02 செயற்கைக்கோள் இன்று (ஜனவரி 29) காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளானது இந்தியாவின் தரை, வான் மற்றும் கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும். top ten news today
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தவெக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!
தவெகவின் இரண்டாவது கட்ட மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிடுகிறார்.
மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பழனி பாபாவும் சமூக நீதியும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு!
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை மூன்றாம் மண்டல பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
சிவகார்த்திகேயன் 25-ஆவது படம் அப்டேட்!
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் சிவகார்த்தியேன் நடிக்கும் 25-ஆவது படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!
தை அமாவாசை தினமான இன்று அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகிறது.
விஜய் ஆண்டனி 25-ஆவது படம்!
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 25-ஆவது படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை, ஆஸ்திரேலியா மோதல்!
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை கல்லே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.