டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil January 29 2024

பிரதமர் மோடி கலந்துரையாடல்! top ten news today in Tamil January 29 2024

பள்ளி மாணவர்களின் தேர்வு பயங்களை போக்கி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 29) கலந்துரையாடுகிறார்.

அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுகவின் தொகுதி பங்கீட்டு குழு, பிரச்சார மற்றும் விளம்பர குழுக்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி!

பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியை மதுரையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ரோமியோ அப்டேட் ரிலீஸ்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ரோமியோ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது.

தெறி டைட்டில் டீசர்!

அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்தியில் உருவாகி வரும், தெறி ரீமேக் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது.

ஓபிஎஸ் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 618-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிடிவி தினகரன் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவகங்கை மாவட்ட சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.

புரோ கபடி போட்டிகள்!

இன்றைய புரோ கபடி போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்

டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க : அப்டேட் குமாரு

top ten news today in Tamil January 29 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel