மனதின் குரல் நிகழ்ச்சி! top ten news today in Tamil January 28 2024
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று (ஜனவரி 28) உரையாற்றுகிறார்.
உச்சநீதிமன்றம் வைர விழா!
உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75-ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
ஜெகதீப் தன்கர் புதுவை வருகை!
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
எடப்பாடி தஞ்சை வருகை!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொள்கிறார்.
முருகப்பெருமான் ஆன்மீக பயணம்!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மீக பயணம் சென்னை கந்தக்கோட்டத்தில் இன்று தொடங்க உள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்திப்பு!
மக்களவை தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கரூர் மாவட்டத்தில் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
டிடிவி ஆலோசனை!
சேலம் மாவட்ட அமமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 616-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ், யு மும்பா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
அடிக்கல்லுக்கு அனிவர்சரி: அப்டேட் குமாரு
top ten news today in Tamil January 28 2024