டாப் 10 நியூஸ்: குடியரசு தின கொண்டாட்டம் முதல் ஸ்டாலின் மதுரை விசிட் வரை!

Published On:

| By Selvam

குடியரசு தினம்!

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

ஸ்டாலின் மதுரை விசிட்!

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்சியை ஆளும் திமுக அரசும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக புறக்கணித்துள்ளது.

கிராமசபை கூட்டம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

‘தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

பத்ம விருதுகள் அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், பறையிசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுச் செயலர் சீனா பயணம்!

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் பயணமாக இன்று சீனாவுக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் மற்றும் துணை அமைச்சருடன் இருதரப்பு நாடுகளின் அரசியல், பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பெட்ரோல் போட ஹெல்மெட் அவசியம்!

சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்துத் துறை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share