மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்!
சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான இன்று (ஜனவரி 25) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
டிரோன்கள் பறக்க தடை!
நாளை (ஜனவரி 26) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
குடும்ப அட்டை சிறப்பு முகாம்!
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேசிய வாக்காளர் தினம்!
வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாக எண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை ஒட்டி சென்னை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.50 மணிக்கு வேளச்சேரி நோக்கி புறப்படும் மின்சார ரயில் 10 மணிக்கும், 10.20-க்கு புறப்படும் மின்சார ரயில் 10.30 மணிக்கும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்!
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்.சி.எல் சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் இன்று டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இந்தியா – இங்கிலாந்து மோதல்!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
தேசிய சுற்றுலா தினம்!
சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் கலாச்சாரம், பொருளாதார மதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று இந்தியா முழுவதும் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.