கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம்! top ten news today in Tamil January 24 2024
மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) திறந்து வைக்கிறார்.
நிர்வாகிகள் சந்திப்பு!
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக ஒருங்கிணைப்பு குழு இன்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
விஜயகாந்த் படத்திறப்பு நிகழ்ச்சி!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்!
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருப்பதி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 613-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி லீக் போடியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங்க் டெல்லி அணிகளும், மற்றொரு போட்டியில் தெலங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதுகின்றன.
சிறப்பு ரயில்கள்!
தைப் பூசத்தை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனிக்கு இன்றும் நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தலுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு : வைத்திலிங்கம்
கிச்சன் கீர்த்தனா : மட்டன் சேமியா பிரியாணி
top ten news today in Tamil January 24 2024