டாப் 10 நியூஸ்: ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு முதல் மம்மூட்டி படம் ரிலீஸ் வரை!

Published On:

| By Selvam

கீழடி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா!

‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிடுகிறார்.

நேதாஜி பிறந்த நாள்!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

டங்ஸ்டன் விவகாரத்தில் நல்ல செய்தி!

மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் குழுவினருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேற்று (ஜனவரி 22) டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று (ஜனவரி 23) அதிகாரப்பூர்வமான நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார்.

கதிர் ஆனந்திடம் விசாரணை!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ ரிலீஸ்!

கெளதம் மேனேன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.

குளிர்கால விளையாட்டு போட்டிகள்!

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று முதல் நடைபெற உள்ள கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைக்கிறார்.

‘ஹைலேசோ ஹைலேசா’ பாடல் ரிலீஸ்!

சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ திரைப்படத்தின் ‘ஹைலேசோ ஹைலேசா’ பாடல் இன்று வெளியாகிறது.

இலவச தரிசன டோக்கன்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel