ராமர் கோவில் திறப்பு விழா! top ten news today in Tamil January 22 2024
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜனவரி 22) நடைபெறுகிறது.
சிறப்பு பூஜை!
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி தமிழக கோவில்களில் இன்று பாஜகவினர் சிறப்பு பூஜை மேற்கொள்ள உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்!
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.
புரோ கபடி லீக் போட்டிகள்!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 611-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
வேலூரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டி, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அரை நாள் விடுமுறை!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா வெஜ் பிரியாணி
மாநாடு முடிஞ்சி அயோத்திக்கு போறேன் : அப்டேட் குமாரு
top ten news today in Tamil January 22 2024