டாப் 10 நியூஸ்: அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் பரந்தூர் செல்லும் விஜய் வரை!

Published On:

| By Selvam

டிரம்ப் பதவியேற்பு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தநிலையில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டிரம்ப் இன்று (ஜனவரி 20) பதவியேற்கிறார்.

கொல்கத்தா பாலியல் வழக்கில் தீர்ப்பு!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா சில்தா நீதிமன்றம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தநிலையில், தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கருத்தரங்கு!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

பரந்தூர் செல்லும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்கிறார்.

இறுதி வேட்பாளர் பட்டியல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலானது இன்று வெளியாகிறது.

சுற்றுலா பகுதிகளில் அமைச்சர் ஆய்வு!

கோவை குற்றாலம், வெள்ளியங்கிரி கோவில் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் இன்று ஆய்வு செய்கிறார்.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கூடுதல் டோக்கன்கள்!

முகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் அலுவலங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.93-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே இன்று காலை 4 முதல் 6 மணி வரை சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிக்பாஸ் சீசன் 8 : வெற்றி மேடையில் முத்துக்குமரன் செய்த சம்பவம்!

அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel