கேல் ரத்னா விருது!
2024-ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 17) டெல்லியில் வழங்குகிறார்.
பாரத போக்குவரத்து கண்காட்சி!
போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
எம்ஜிஆர் பிறந்தநாள்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
அரசு விடுமுறை!
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாட வசதியாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரு திருவிழா!
ஜனவரி 13-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
ககன மார்கன் பாடல் ரிலீஸ்!
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் 42 காசுகள் உயர்ந்து ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இளையராஜா இசைக்கச்சேரி!
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரி இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மோதல்!
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தின் இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…