ஓபிஎஸ் வழக்கில் இன்று தீர்ப்பு! top ten news today in Tamil January 11 2024
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பளிக்கிறது.
திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மாணவரணி சார்பில் சேலத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பி.எஸ்.ராமன் பதவியேற்பு!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.ராமன் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வானிலை நிலவரம்!
கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடக்குப்பட்டி ராமசாமி டிரெய்லர்!
சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதல்!
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பிரம்மயுகம் டீசர் ரிலீஸ்!
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 602-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கேலோ இந்தியா தேர்வுப்போட்டிகள்!
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான தேர்வுப்போட்டிகள் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்
காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!
IND vs AFG: முதல் போட்டியில் விராட் கோலி இல்லை: டிராவிட் அதிர்ச்சி தகவல்!
முடிந்தது ஷூட்டிங் : லேட்டஸ்ட் கங்குவா லுக் வெளியிட்ட சூர்யா
top ten news today in Tamil January 11 2024