டாப் 10 நியூஸ்: எடப்பாடிக்கு பாராட்டு விழா முதல் இந்தியா Vs இங்கிலாந்து மேட்ச் வரை!

Published On:

| By Selvam

விவசாயிகள் பாராட்டு விழா!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் இன்று (பிப்ரவரி 9) பாராட்டு விழா நடைபெறுகிறது. top ten news today

திருச்சி பறவைகள் பூங்கா திறப்பு!

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தலைநகரில் பாஜக ஆட்சி!

தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை விட 91,558 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். சந்திரகுமார் 1,15,709 வாக்குகளும், சீதாலட்சுமி 24,151 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

சிபிஎம் மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப்ரல் 2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சிவகங்கையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்தியா – இங்கிலாந்து மோதல்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது.

எம்புரான்’ படம் அப்டேட்!

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் நடித்துள்ள எம்புரான் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு இன்று முதல் வெளியாகிறது.

ஹேப்பி ஸ்ட்ரீட்!

கோவை மாவட்டம் கொடிசியாவில் இன்று ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், டீசல் விலை 10 பைசா குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. top ten news today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share