பிரதமர் மோடி கோவா பயணம்! top ten news today in Tamil February 6 2024
கோவாவில் இன்று (பிப்ரவரி 6) நடைபெறும் ‘வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு!
அதிமுக தேர்தல் அறிக்கை குழு இன்று விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கின்றனர்.
புதிய குடியிருப்புகள் திறப்பு விழா!
சென்னை துறைமுகம் கல்யாணபுரம் திட்டப்பகுதியில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 புதிய குடியிருப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மீனவர்களை சந்திக்கும் சீமான்!
சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்திக்கிறார்.
கண்ணம்மா கண்ணம்மா பாடல் ரிலீஸ்!
ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் படத்தின் கண்ணம்மா கண்ணம்மா பாடல் இன்று வெளியாகிறது.
அங்கித் திவாரி ஜாமீன் மனு!
ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 626-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.
புரோ கபடி போட்டி!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மோதல்!
ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா!
சண்டிகர் தேர்தல் – ஜனநாயக படுகொலை : உச்ச நீதிமன்றம் காட்டம்!
top ten news today in Tamil February 6 2024