பிரதமர் மோடி ஒடிசா பயணம்! top ten news today in Tamil February 3 2024
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இன்று (பிப்ரவரி 3) நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.68,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
அண்ணா நினைவு நாள்!
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் வரை இன்று அமைதி பேரணி நடைபெற உள்ளது.
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு!
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை!
கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான NMMS தேர்வு நடைபெற உள்ளதால், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லக்கி பாஸ்கர் ஃபர்ஸ்ட் லுக்!
துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.
கேட் தேர்வு!
பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இளங்கலை மாணவர்களுக்கான கேட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 623-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் யுபி யோதாஸ், யு மும்பா அணிகளும், மற்றொரு போட்டியில் தபாங்க் டெல்லி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சாலட்
இன்று நேற்று நாளை 2 என்ன ஆச்சு? விஷ்ணு விஷால் பதில்!
top ten news today in Tamil February 3 2024