top ten news today in Tamil February 28 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நலத்திட்ட பணிகள்! top ten news today in Tamil February 28 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.13,600 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 28) துவக்கி வைக்கிறார். பின்னர், நெல்லையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார்.

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு விசாரணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் இறுதி விசாரணை இன்று துவங்குகிறது.

பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 5-வது மண்டல மாநாட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் மயிலாடுதுறையில் இன்று நடைபெறுகிறது.

ஜே பேபி டிரைலர் ரிலீஸ்!

சுரேஷ் மாரி இயத்தில் தினேஷ் நடித்துள்ள ஜே பேபி படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 647-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரிமாபட்டி சக்திவேல் டிரைலர் ரிலீஸ்!

ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ள ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மோதல்!

இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து

இமாச்சல் : மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி!

top ten news today in Tamil February 28 2024

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts