top ten news today in Tamil February 26 2024
ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி!
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
அண்ணா, கலைஞர் புதிய நினைவிடம் திறப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் தீர்ப்பு!
ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
பாலாறு தடுப்பணை!
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இன்று முதல் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
ரயில் சேவை நீட்டிப்பு!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக தாம்பரம் வரை செல்லும் 10 ரயில்கள் இன்று முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி ஆலோசனை!
இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, 2024 நாடாளுமன்ற பணிகள் தொடர்பாக திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அன்பகத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்றைய புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி போட்டியில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 646-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை
அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு
top ten news today in Tamil February 26 2024