top ten news today in Tamil February 24 2024
கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்!
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) திறந்து வைக்கிறார்.
ஜெயலலிதா பிறந்தநாள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
புத்தொழில் மைய அலுவலகம்!
சென்னை நந்தனம் சிம்.எம்.ஆர்.எல் வளாகத்தில் புத்தொழில் மைய அலுவலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தஞ்சாவூர் உள்ளூர் விடுமுறை!
மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்!
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று (பிப்ரவரி 24) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 644-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெளர்ணமி கருட சேவை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெளர்ணமி கருட சேவை இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யும்.
இடிமுழக்கம் பாடல் ரிலீஸ்!
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் ‘அடி தேனி சந்தையில்’ பாடல் இன்று வெளியாகிறது.
சுற்றுலா பேருந்து இயக்கம்!
கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு இன்று முதல் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கடற்பாசி ஸ்வீட்
மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!
top ten news today in Tamil February 24 2024