top ten news today in Tamil February 23 2024
விவசாயிகள் கருப்பு தினம்!
பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறை நடத்திய தாக்குதலில் 21 வயதான விவசாயி சுபாகரன் சிங் உயிரிழந்தார். இதனை கண்டித்து இன்று (பிப்ரவரி 23) கருப்பு தினமாக விவசாய அமைப்புகள் கடைபிடிக்கின்றனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தகவல் தொழில்நுட்ப மாநாடு!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் ‘Umagine TN’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
செய்முறை தேர்வு!
எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அந்தோணியார் ஆலய திருவிழா!
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது, இரவு அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நடைபெறும்.
மும்பை – டெல்லி மோதல்!
இன்று தொடங்கும் மகளிர் பிரிமீயர் லீக் முதல் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 643-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று வெளியாகும் திரைப்படங்கள்!
பைரி, பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம், வித்தைக்காரன், நினைவெல்லாம் நீயடா ஆகிய எட்டு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!
top ten news today in Tamil February 23 2024