டாப் 10 நியூஸ்: புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டம் முதல் சிவகார்த்திகேயன் படம் அப்டேட் வரை!

Published On:

| By Selvam

கத்தார் பிரதமர் இந்தியா வருகை!

பிரதமர் மோடி அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக கத்தார் பிரதமர் ஷேக் தமீம் பின் ஹமாத் தல் – தனி இன்று (பிப்ரவரி 17) இந்தியா வருகிறார். நாளை (பிப்ரவரி 18) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். top ten news today

புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு!

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய மூன்று பேர் கொண்ட புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை பட்ஜெட்!

இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக்க பொறுப்பேற்ற பின்பு தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

டெல்லி நிலநடுக்கம்!

டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் 4.0 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் படம் அப்டேட்!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.

சார்பதிவாளர் அலுவலங்களில் கூடுதல் டோக்கன்!

முகூர்த்த நாளை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுக்கிறது. அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் விநியோகிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்!

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

ஃபாஸ்டேக் புதிய விதி அமல்!

நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஃபாஸ்டேக்கில் ரீச்சார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்குகளை முறையாக பராமரிக்கவில்லை என்றாலோ அபராதம் விதிக்கப்படும்.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. top ten news today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share