top ten news today in Tamil February 17 2024
பாஜக தேசிய குழு கூட்டம்!
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தேசிய குழு கூட்டம் டெல்லியில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 17, 18) நடைபெறுகிறது.
இன்சாட் 3-டிஎஸ் செயற்கைகோள் !
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3-டிஎஸ் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்துகிறது.
ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்!
பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.
திமுக பிரச்சார கூட்டம்!
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று திமுக பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.
மநீம திட்டமிடல் கூட்டம்!
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டமிடல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
ரயில்கள் ரத்து!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று இரவு 10.25 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை ஆவடி தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 637-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்!
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மோதல்!
இன்றைய முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்
திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் தொடங்கியது!
top ten news today in Tamil February 17 2024