top ten news today in Tamil February 16 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

top ten news today in Tamil February 16 2024

புதிய திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) காணொலி காட்சி வாயிலாக சாலை, ரயில்வே, சூரிய மின்சக்தி உள்ளிட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகா பட்ஜெட் தாக்கல்!

கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல்வர் சித்தராமையா 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பணி நியமன ஆணை!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 636-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சைரன் திரைப்படம் ரிலீஸ்!

ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.

ஸ்டார் பாடல் ரிலீஸ்!

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் star in the making பாடல் இன்று வெளியாகிறது.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா

தனித்துப் போட்டியா? : தந்தையின் பேச்சுக்கு உமர் அப்துல்லா மறுப்பு!

top ten news today in Tamil February 16 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *