தேர்தல் பத்திரம் வழக்கில் தீர்ப்பு! top ten news today in Tamil February 15 2024
தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) தீர்ப்பளிக்கிறது.
விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கல்வி கடன் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு!
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 625-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இந்தியா, இங்கிலாந்து மோதல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வாலிபால் போட்டி!
பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குச்சி சிப்ஸ்
T20 WorldCup 2024: இந்திய கேப்டனை உறுதி செய்த ஜெய் ஷா
top ten news today in Tamil February 15 2024