முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள்!
காமராஜர் உயர்கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளில் நவீன வசதிகளுடன் ரூ.120.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கல்வி வளாகங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் CREDAI FAIRPRO 2025 கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். top ten news today
திமுக கிரிக்கெட் போட்டி!
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நடத்தும் கிரிக்கெட் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
போக்குவரத்து கழக பணியாளர்கள் பேச்சுவார்த்தை!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
‘வா வாத்தியார்’ பாடல் ரிலீஸ்!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிர் பத்திக்காம’ பாடல் இன்று வெளியாகிறது.
பெங்களூரு – குஜராத் மோதல்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதுகின்றன.
‘கிஸ்’ டீசர் ரிலீஸ்!
சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இன்றைய தியேட்டர் ரிலீஸ்!
கவுண்டமனி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள தினசரி, லிஜோமோல் நடித்துள்ள காதல் என்பது பொதுவுடைமை, சுசீந்திரன் இயக்கியுள்ள 2கே லவ் ஸ்டோரி, பாலாஜி முருகதாஸ், ரச்சிதா நடித்துள்ள ஃபயர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. top ten news today