அதிமுக உட்கட்சி வழக்கில் தீர்ப்பு!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) தீர்ப்பளிக்கிறது. top ten news today
திமுக மகளிர் அணி ஆலோசனை!
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் இன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கெளதமசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அதிமுக ஐடி விங் கூட்டம்!
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தேமுதிக கொடியேற்றம்!
தேமுதிக கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகளாகும் நிலையில், தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் கொடி ஏற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்!
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று முதல் ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இன்றைய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்!
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலைவேளையில், லேசான பனிமூட்டம் காணப்படும்.
விஜய் தேவரகொண்டா புதிய படம் அப்டேட்!
கெளதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகிறது. top ten news today