முதலீட்டு உச்சி மாநாடு!
ராஜஸ்தானில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
சட்டமன்ற கூட்டத்தொடர்!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
சோனியா காந்தி 78-ஆவது பிறந்தநாள்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
வீர தீர சூரன் டீசர்!
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!
ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.
The Girlfriend டீசர் ரிலீஸ்!
ராகுல் நவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்துள்ள ‘The Girlfriend ‘ படத்தின் டீசர் இன்று காலை 11.07 மணிக்கு வெளியாகிறது
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டி!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நைஜிரியா, ரவாண்டா அணிகள் மோதுகின்றன.
பேபி ஜான் டீசர் ரிலீஸ்!
ஏ.காளிதாஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’!
”சரியான ஆளா இருந்தா… என்மேல் கேஸ் போடுங்கள்” : செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை சவால்!