அஷ்டலட்சுமி மகா திருவிழா!
வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை கொண்டாடும் அஷ்டலட்சுமி மகா திருவிழாவை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 6) டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
விவசாயிகள் போராட்டம்!
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் டெல்லியில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் நினைவு தினம்!
அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி இன்று இந்தியா முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு நூலை வெளியிடுகிறார்.
ஆஸ்திரேலியா, இந்தியா மோதல்!
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்து வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
‘சிறப்பு சிறு வணிக கடன்’ திட்டம்!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு ‘சிறப்பு சிறு வணிக கடன்’ திட்டத்திற்கான முகாம் இன்று முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…