top ten news today in Tamil December 5 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மிக்ஜாம் புயல் அப்டேட்! top ten news today in Tamil December 5 2023

மிக்ஜாம் புயலானது நெல்லூருக்கு 20 கி மீ  வடக்கு – வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இன்று காலை ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிப்பட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 5) தெரிவித்துள்ளது.

பொதுவிடுமுறை!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு தினம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சசிகலா வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

விமான சேவை ரத்து!

கனமழை காரணமாக இன்று காலை 9 மணி வரை சென்னை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் இயங்கும்!

சென்னை உயர்நீதிமன்றம் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை!

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிறு அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம், நியூசிலாந்து மோதல்!

இன்றைய ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 562-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி – பூண்டு – மிளகு ரசம்

மிசோரத்தில் திருப்பம்: 36 வருட வரலாற்றை உடைத்த ஜோரம் மக்கள் இயக்கம்!

top ten news today in Tamil December 5 2023

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *