டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மிசோரம் வாக்கு எண்ணிக்கை!

மிசோரம் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மிக்ஜாம் புயல்!

மிக்ஜாம் புயலானது சென்னைக்கு 150 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காற்றின் வேகமானது எண்ணூர் துறைமுகத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் கூட்டம்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைடைகிறது.

சென்னை ரயில் சேவை!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணை, மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 561-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீதிமன்றங்கள் செயல்படும்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீதிமன்றங்கள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய புரோ கபடி போட்டிகள்!

இன்றைய புரோ கபடி போட்டியில் புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்கஸ் அணிகள் மோதுகின்றன, மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான்கு மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *