டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil December 30 2023

விமான நிலையம் திறப்பு விழா! top ten news today in Tamil December 30 2023

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 30) திறந்து வைக்கிறார்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்!

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அரங்கநாத சுவாமி வேடுபரி உற்சவம்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று வேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.

தவாக பொதுக்குழு கூட்டம்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 588-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மின்தடை ஏற்படும் இடங்கள்!

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக  இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை போரூர், தாம்பரம், வியாசர்பாடி, ஐ.டி.காரிடர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய புரோ கபடி லீக் போட்டிகள்!

இன்றைய புரோ கபடி போட்டியில் தெலங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகளும் மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ், தபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சுண்டல் வித் கோன்

ரிப்பன் பில்டிங்கை கடப்பதற்குள்… விஜயகாந்துக்கு சென்னை மாநகராட்சி செய்த கௌரவம்!

top ten news today in Tamil December 30 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel