மனதில் குரல் நிகழ்ச்சி!
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் டிசம்பர் மாத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிசம்பர் 29) மனதில் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார்.
மினி டைடல் பூங்கா திறப்பு!
தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கிறார்.
பி.எஸ்.எல்.வி சி- 60 ராக்கெட் கவுண்ட்டவுன் !
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (டிசம்பர் 30) இரவு பி.எஸ்.எல்.வி சி- 60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்குகிறது.
ஹரியானா, பாட்னா மோதல்!
இன்று நடைபெறும் புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கொரியா விமான விபத்து!
தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில், 58 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ் மோதல்!
இன்றைய ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மார்கழியில் மக்களிசை!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி !
2024-ஆம் ஆண்டின் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலி : புதின் மன்னிப்பு கேட்டது ஏன்?