அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்! top ten news today in Tamil December 26 2023
சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
மழை, வெள்ள பாதிப்பு நிர்மலா சீதாராமன் ஆய்வு!
தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி வருகிறார்.
மருத்துவ முகாம்!
பசுமை தாயகம் சார்பில் சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கிறார்.
அயலான் இசை வெளியீட்டு விழா!
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை!
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை உணவு திருவிழா!
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் நாளையும் உணவு திருவிழா நடைபெறுகிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதல்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தென் கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 583-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்ப்டுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பது ஏன்?
top ten news today in Tamil December 26 2023