தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று (டிசம்பர் 25) நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் பெருவிழா!
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!
ஒடிசா மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மிசோரம் மாநில ஆளுநராக விஜய்குமார் சிங், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத், பிகார் ஆளுநராக ஆரிஃப் முகமது கான், மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோரை புதிய ஆளுநர்களாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு மலை ரயில் இயக்கம்!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
வாஜ்பாய் பிறந்தநாள்!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 43 பைசாக்கள் உயர்ந்து ரூ.101.23-க்கும், டீசல் விலை 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூர்யா படம் அப்டேட்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துவரும் படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
வேலுநாச்சியார் நினைவு தினம்!
ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து ராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானங்களை மீட்டெடுத்த வேலுநாச்சியாரின் 228-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…