இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்! top ten news today in Tamil December 22 2023
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று (டிசம்பர் 22) ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி!
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விசிக ஆர்ப்பாட்டம்!
நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கனமழை விடுமுறை!
மழை, வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தண்ணீர் திறப்பு!
கிருஷ்ணகிரி நீர் தேக்கத்தில் இருந்து இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இன்று வெளியாகும் திரைப்படங்கள்!
சலார், சபா நாயகன், பொற்காசுகள், அக்வாமேன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
சுசீந்திரம் கருட தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் கருட தரிசனம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 580-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புரோ கபடி போட்டிகள்!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோள ரவை – உப்புமா கொழுக்கட்டை
தூத்துக்குடி, நெல்லை: விவசாயிகளுக்கு நிவாரணம் எவ்வளவு?
top ten news today in Tamil December 22 2023