இந்தியா கூட்டணி ஆலோசனை! top ten news today in Tamil December 19 2023
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது.
பிரதமர் மோடி – ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக வெள்ள நிவாரண பாதிப்புக்கான நிவாரணம் பெறுவது குறித்து பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆயுதப்படை அதிகாரிகளுடன் ஆளுநர் ரவி ஆலோசனை!
தென் மாவட்ட மழை, வெள்ள மீட்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ரவி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பயணம்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்.
கனமழை விடுமுறை!
அதி கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறையும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரயில் சேவைகள் ரத்து!
தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் நெல்லை – செங்கோட்டை, நெல்லை – நாகர்கோவில் உள்ளிட்ட 23 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் மினி ஏலம்!
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதல்!
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!
நாளை எந்தெந்த மாவட்டங்களில் பொது விடுமுறை?: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?
top ten news today in Tamil December 19 2023