காலநிலை மாற்ற உச்சி மாநாடு! top ten news today in Tamil December 1 2023
துபாயில் இன்று (டிசம்பர் 1) நடைபெறும் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அயோத்திதாசர் மணிமண்டபம் திறப்பு விழா!
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
ஃபார்முலா 4 கார் பந்தய வழக்கு!
சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
திறனாய்வு தேர்வு முடிவுகள்!
11-ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
சலார் டிரைலர் வெளியீடு!
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.
நா நா முதல் பாடல்!
என்.வி நிர்மல் குமார் இயக்கத்தில் சரத்குமார், சசிகுமார் நடிக்கும் நா நா திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 559-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வார திரையரங்கு ரிலீஸ்! top ten news today in Tamil December 1 2023
நயன்தாரா நடித்த அன்னபூரணி, தர்ஷன் நடித்த நாடு, பாலாஜி முருகதாஸ் நடித்த வா வரலாம் வா, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், கார்த்திகேயன் நடித்த சூரியன் ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழையிலும் பணியில்… சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!
டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக கால்பதித்த உகாண்டா!
லேசான மழை… கன பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு