டாப் 10 நியூஸ்: கலைஞர் நினைவு நாள் பேரணி முதல் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு வழக்கு தீர்ப்பு வரை!

அரசியல்

கலைஞர் நினைவு தினம்!

முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 7) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

சந்திரபாபு நாயுடு தமிழகம் வருகை!

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் கருத்தரங்கை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுதலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியேற்பு!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் இன்று பதவியேற்கிறார்.

விருதுநகர், சேலம் உள்ளூர் விடுமுறை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியல்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

விசைத்தறி ஒப்பந்தக்கூலி பேச்சுவார்த்தை!

விசைத்தறி ஒப்பந்தக்கூலி பிரச்சனை தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 143-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா – இலங்கை மோதல்!

இன்றையை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு

பாரிஸ் இதுக்கும் ஃபேமசா? அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *