வயநாடு நிலச்சரிவு!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 216 பேரை காணவில்லை. தொடர்ந்து ஏழாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 5) மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் கொளத்தூர் விசிட்!
முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நெல்லை மேயர் தேர்தல்!
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த நிலையில், இன்று புதிய மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!
சென்னை சைதாப்பேட்டையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி உள்ளூர் விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய பனிமயமாதா திருக்கோவில் விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் இசை வெளியீட்டு விழா!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும்,
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 141-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாட்டர் பாக்கெட் வீடியோ பாடல்!
தனுஷ் இயக்கி நடித்து வெளியாகியுள்ள ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடல் வீடியோ இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்
தாத்தா ரீ என்ட்ரி: அப்டேட் குமாரு