டாப் 10 நியூஸ் இந்தியா Vs இலங்கை ஒருநாள் போட்டி முதல் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் வரை!

Published On:

| By Selvam

ஆசிரியர்களுக்கு பாராட்டு!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

மாநகர் போக்குவரத்து கழகத்தின் 88 புதிய பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது.

பைக்கரா படகு இல்லம் திறப்பு!

உதகையில் சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த பைக்கரா படகு இல்லம் நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.

கோவை – திண்டுக்கல் மோதல்!

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கோவை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன.

போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணிகள் காரணமாக, மடிப்பாக்கம் பிரதான சாலை முதல் கீழ்க்கட்டளை சந்திப்பு வரை மேடவாக்கம் பிரதான சாலையில் போக்குவரத்து சோதனை மேற்கொள்வதற்காக இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா மாணவர் சேர்க்கை!

2024 – 2025 கல்வி ஆண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 140-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்தியா மோதல்!

இலங்கை – இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல… ஏன்?

சென்னை : 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share